மலையகம்

சவூதியில் 10 வருடங்களாக அவதியுற்ற இலங்கை பணிப்பெண்? அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ல கை கொடுத்தார்.

சவூதி அரே­பி­யா­வுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணாக சென்று 10 வரு­டங்கள் சம்­பளப் பணம் வழங்­கப்­படாமல் இருந்­து­வந்த இலங்கை பெண்­ணுக்கு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­யீட்­டினால் அதனை பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­த­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக  பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பேரா­தனை தெல்­கொட, போபிட்­டிய பிர­தே­சத்­தைச்­ சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயான ராம­சாமி பர­மேஸ்­வரி (வயது 54) 12.20.2007 அன்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் பதிந்­து­விட்டு வீட்­டுப்­ப­ணிப்­பெண்­ணாக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்ளார். அந்த தினம் முதல் அவ­ருக்கு வேலை­செய்த வீட்டில் சம்­பளம் வழங்கப்படவில்லை. அத்­துடன் அவ­ரது உற­வி­னர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் வீட்டு எஜ­மானனால் சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை.

இந்த சம்­பவம் தொடர்­பாக கேள்­வி­யுற்ற  அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள குறித்த பெண்­ணுக்­கு­ரிய சம்­பளப் பணத்தை பெற்­றுக்­கொ­டுத்து அவரை உட­ன­டி­யாக நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தூத­ரக அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அதன்­ பி­ர­காரம் தூத­ரக அதி­கா­ரிகள் பர­மேஸ்­வ­ரியின் எஜ­மானனை சந்­தித்து அவ­ருக்­கு­ரிய சம்­ப­ளப் ­ப­ணத்தை வழங்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்­ளனர். என்­றாலும் அவர் அதனை மறுத்­துள்ளார். அத­னைத்­தொ­டர்ந்து அதி­கா­ரிகள் அந்த நாட்டுப் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். பொலிஸார் வீட்டு எஜ­மா­ னனை அழைத்து விசா­ரணை நடத்தி, அந்த பெண்­ணுக்­கு­ரிய சம்­ப­ளப் ­ப­ணத்தை வழங்­கு­மாறு கட்­ட­ளை­யிட்­டனர். அதனடிப்படையில் அவ­ருக்­கு­ரிய சம்­ப­ளப்­பணம் 20 இலட்­சத்து 41 ஆயி­ரத்து 500 ரூபாவை அவ­ரு­டைய எஜ­மா­னி­ட­மி­ருந்து பெற­மு­டிந்­தது. குறித்த சம்­ப­ளப்­பணம் பர­மேஸ்­வ­ரி­யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் தற்போது சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை அவசரமாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button