...
உலகம்

சவூதி அரேபியாவில் பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிப்பு.

சவூதி அரேபியாவில் உள்ள பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு பிரமாண்டமான கழுதை, குதிரைகளின் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஜோர்தானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களுடன், ஒட்டகச் சிற்பங்கள் ஒத்துப்போனதாலேயே அவை 2 ஆயிரம் ஆண்டு பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர்.

ஆனால் இந்தச் சிற்பங்கள் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். அப்போது இந்தப் பாலைவனப் பகுதி நீர் நிரம்பிய, குளிரான இடமாக இருந்துள்ளது.

இந்தத் தளத்தில் இருந்து 9 மைல் தொலைவில் உள்ள சேர்ட் என்று அழைக்கப்படும் கற்களைக் கொண்டே இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen