செய்திகள்

சஹரானுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் இருவர் கைது

சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கஹடகஸ்திகிலிய மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு சஹரான் ஹஷீம் உட்பட 5 பேருக்கு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக கஹடகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கஹடகஸ்திகிலிய, முகரியாவ உப தபால் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்தவர் ஆவார்.

இதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர், இனவாதத்தைப் பரப்பியது மற்றும் சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com