செய்திகள்

சஹ்ரானின் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட மேலும் ஓர் இளைஞன் கைது.!

கடந்த 2018 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் சஹ்ரான் ஹசீமின் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்து கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஓர் இளைஞன் நாரம்மல பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை தலுவகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் எனும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரையில் இவ்வாறு வகுப்புக்களில் கலந்துகொண்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button