செய்திகள்

சஹ்ரான் மனைவியின் மூத்த சகோதரர் கைது.

பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜாமா-அத் அமைப்புடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் குருணாகல் கட்டுபொத பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான மொஹமது அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

தேசிய தௌஹீத் ஜாமா-அத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹரானுடன் நுவரெலியாவில் நடத்தப்பட்ட
ஆயுத பயிற்சி மற்றும் சொற்பொழிவுகளில் சந்தேகநபர் பங்கேற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொஹமட் சஹரானுடைய மனைவியின் சகோதரனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் தாயின் சகோதரி, நவுபர் மௌலவியை திருமணம் முடித்துள்ளதாவும்
பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button
image download