சாதரண தரத்தில் சாதித்த ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரி
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் சாதாரண தரம் மற்றும் ,உயர்தரங்களில் பெறுபேறுகளில் பல சாதனைகளை படைத்து வரும் நு. ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரி இம்முறையும் வெளிவந்த 2017ம் ஆண்டுக்கான சாதரண தர பரீட்சையிலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுகின்றது. இம்முறையும் இந்த கல்லூரியிலிருந்து 95 வீதமான மாணவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
அதன் படி கல்லூரியின் பெறுபேறுகளின் அடிப்படையில் புண்ணிய மூர்த்தி தனுஜா 8A,B பெற்று முதலாம் இடத்தையும் பீட்டர் மேவின் ரொட்ரிகோ 7A ,2B பெற்று இரண்டாம் இடத்தையும் ,முருகராஜ் தர்சன் 6A ,B,C 2, மற்றும் கோபி கிருஷ்ணன் நிவேதிக்க 6A ,B,2C பெற்று 03ம் இடத்திலும் இருக்க ஏனைய மாணவர்கள் முறையே சிவானந்தன் துவாரகா 5A ,3B ,C ,ராமஜெயம் சிரோசன் 5A ,2B ,2C ,விஜயவீரன் கவிப்பிரியா 5A ,B,3C ,ஞானப்பிரகாசம் திரிஷா 5A ,2B ,C ,S ,சுகுமார் கிரிஷ்ண வேணி 5A ,B ,2C ,s ,சூரியக்குமார் நிலூக்ஸன் 5A ,3C ,S பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் ,அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் அதிபர் திரு.ஜெயராம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்ககளையும் தெரிவித்துள்ளார்.