செய்திகள்

சாதாரண தரப்பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைப்பு ..

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள், இன்று பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார்.

தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் இன்று தபால் மூலம் அனுப்பப்படவுள்ளது.

அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஏற்பாட்டு பிரிவை தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை, 4 ஆயிரத்து 513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com