கல்விசெய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வு பரீட்சைகள் ஆகியன நாளை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

நாளை நள்ளிரவின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

மேலும், 011 27 84 208, 011 27 84 537, 011 31 88 350 அல்லது 011 31 40 314 ஆகிய தொலைபேசி இலக்கத்தினூடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download