செய்திகள்
சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பம்

2018ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களின் கீழ் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் , அதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மேலும், இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் ஜனவரி மாதம் 8ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.