கல்விசெய்திகள்

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய தகவல்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வு பரீட்சைகள் ஆகியன எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை மத்திய நிலையங்களில் பணியாற்றவுள்ள கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சிகள் இன்று இடம்பெறுகின்றன.

பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதில் நான்காயிரத்து 987 பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பன்னிரண்டாயிரம் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை சாதாராண தர பரீட்சைக்காக 08 விசேட மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலை, வடரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button