சாந்தினிக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ?

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலையில் தொழில் புரிந்த தாதியின் தற்கொலை தொடர்பான நீதியான விசாரணை கோரி இன்று ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தெரியவருவாவது,
தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தை சேர்ந்த தாதி தற்கொலை செய்துகொல்லும் முன்பாக தனது மரணம் தொடர்பில் குரல் பதிவின் மூலம் தெரிவித்த கருத்து சமூக இணையத்தளங்கள் ஊடக அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரியே பிரதேச மக்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டுள்னர்.
மேலும் சம்பவத்தில் தன் உயிரை மாய்த்து கொண்ட தாதி தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியர் மற்றும் அவரின் மனைவியே காரணம் என தனது பெற்றோருக்கு குரல் பதிவின் (WhatsApp) மூலம் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.