விளையாட்டு

சாம்பல் கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது

(ராகவ்)

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆசஷ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஆசஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் இரண்டாவது போட்டி டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பொக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

ஆசஷ் கிரிக்கெட் தொடரின் நான்காம் , ஐந்தாம் போட்டிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்து மற்றும் 14 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.

இந்த இரு போட்டிகளிலும் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆசஷ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com