செய்திகள்

சாய்ந்தமருதில் தகவல் வழங்கியவர்களுக்கு பணப்பரிசில்கள்..

அம்பாறை – சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தமை தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு பணப்பரிசில் வழங்க பொலிஸ் திணைக்கம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜனாக பதவி உயர்த்தப்படுவதோடு அவருக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பயங்கரவாதிகள் தொடர்பான தகவல் வழங்கிய முஸ்லிம் பிரஜைகள் மூவருக்கு தலா 10 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த விடயங்களை தௌிவுபடுத்தினார்.

தகவல் மூலம் : News1st

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com