செய்திகள்

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுதாரிகள் வெடித்த வீட்டில் தீவிர தேடுதல்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சாய்ந்தமருதில் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து உயிரிழந்த வீட்டில் இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டின் நிலத்தினை தோண்டி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டின் காணியில் புதைக்கப்பட்ட நிலையில் பென் ரைவ் மற்றும் சேதமடைந்த நிலையில் மடிக்கண்ணி (Tap)  ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய தொலைபேசி தரவுகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button