செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்.

இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள்
இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன திணைக்களத்தின் ஊடாக இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரம்
அச்சிடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் சாரதிகளுக்கான
உரிமங்களை அச்சிட்டு வந்தது.

இந்த நிலையில், நிறுவனத்துடனான ஒப்பந்தம இரத்து செய்யப்பட்டு, அந்த பணி
இராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா
தெரிவித்தார்.

இதனூடாக நாட்டுக்கு ஒரு தொகை பணம் சேமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related Articles

Back to top button
image download