உலகம்செய்திகள்

சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுப்பு !

பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக இல்லை என்றாலும் காணொலி வாயிலாகசரி இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் குறித்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அரசின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சார்க் மாநாடு நடைபெறாத காரணங்களை பார்த்தால் நிலைமையில் எந்த வித முன்னேற்றமும் காணப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button