...
உலகம்

சாலமன் தீவில் உள்ள நாடாளுமன்றுக்கு தீவைத்தனர் பொதுமக்கள்

சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலமன் தீவுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் மானசே சோகவரே, அண்மையில் தாய்வானுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துவிட்டு, சீனாவுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

அரசின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்ததை அடுத்து, பிரதமரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து நேற்று (24) நாடாளுமன்றத்திற்கு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதன்போது அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் நாடாளுமன்ற கட்டடத்துக்கும், அதன் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen