செய்திகள்

சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற மாணவிக்கு நடந்த சோகம்…

பதுளை வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி சுகயீனம் காரணமாக தனது தாயுடன் சிகிச்சை பெறுவதற்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த மாணவியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார் என்று கூறி மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது திருமணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button