செய்திகள்

சிக்கியது ஆறு கோடிக்கும் அதிக ஹெரோயின்

காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 6 கோடி
ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப்
பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் மாத்தறை , நீர்கொழும்பு மற்றும் பானம பகுதிகளை சேர்ந்தவர்கள் என
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த படகிலிருந்து 5.9 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 1.9 கிலோகிராம்
ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது படகிலிருந்த மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார்.

சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகொன்றே கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com