செய்திகள்

சிக்கியது பாரிய தொகை போதைப்பொருள்.

நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட
சுற்றிவளைப்பில் 60 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது அதிலிருந்து 100 கிலோகிராமிற்கும்
மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியன
கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான்கு சந்தேக நபர்களும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு
பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நால்வரும் சிலாபம் – தொடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும்
தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்தும்
வகையில் கடற்பரப்பில் தொடர்ந்தும் ரோந்து பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை
தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com