செய்திகள்மலையகம்

சிக்கியது 18 ஆயிரம் கழிவு தேயிலை.

சட்டவிரோதமான முறையில் 18 ஆயிரத்து 725 கிலோகிராம் கழிவு தேயிலையை கடத்த முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனெல்ல, றம்புக்கன பகுதியில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு, கழிவு தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கழிவுத்தேயிலையை ஏற்றுமதி செய்வதற்காக பேலியகொட பகுதியில் மூன்று லொறிகளில் கொண்டுசென்ற வேளையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

வெலம்பட, லீமகஹகொட்டுவ மற்றும் ஹத்தேஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 37, 39, 46 வயதுடையவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button