சமூகம்
சிங்கள திரைப்பட நடிகர் திடீர் மரணம்
சிங்கள திரைப்பட நடிகரும், இசை கலைஞருமான ரொனி லீச் தனது 65வது வயதில் காலமானார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வைத்து, மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அவரது பூதவுடலை சில தினங்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இநத நிலையில், இசை நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக அவர் அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.