செய்திகள்

“சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை

கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “பார்க் அன்ட் ரைட் சிட்டி பஸ்” சேவையை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் பிலியந்தலை 120 பஸ் பாதையினூடாகவும் (bus route) காலி வீதி மொரட்டுவ – கொழும்பு பஸ் பாதையினூடாகவும் நாட்டின் இன்னும் சில பிரதான நகரங்களினூடாகவும் இந்த பஸ் சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது கொழும்பை அடுத்துள்ள 4 பஸ் பாதைகளினூடாக பயணிக்கின்ற சிட்டி பஸ் வாகனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் கிடைப்பதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

சிட்டி பஸ் சேவை கடந்த ஜனவரி 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் சேவை கொட்டாவ மாகும்புற பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 138, 174, 112 மற்றும் 115 ஆகிய பஸ் பாதைகளினூடாகப் (bus route) இடம்பெறுகிறது.

இந்த பஸ் சேவைக்கு பொதுவான பஸ் கட்டணத்தின் ஒன்றரை மடங்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த சேவையின் மூலம் கடந்த மூன்றரை மாதங்களினுள் குறிப்பிடத்தக்களவு வருமானம் கெறப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com