சமூகம்நுவரெலியாமலையகம்

‘சித்திரச் சிற்பி’ மலையகத்தின் பெருமையே இந்த தமிழ்ச்செல்வன்!

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” சிற்பக்கலையை தன் உயிர் மூச்சாகபோற்றும் கலைஞர் தான் இந்த தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச் செல்வன், ஸ்ரீ ராமபிரானின் சீதைக்கு ஓர் ஆலயம் அமையப்பெற்ற இயற்கை எழில்மிகு நுவரெலியா மாவட்டத்தின் வெலிமடையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் சித்திரப்பிரிவில் தொடருறுக் கல்வியை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்.

கலைத்தாயின் ஆசியுடன், தன் கடின உழைப்பால் எழில் மிக்க சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை தத்ரூபமாக செதுக்கியும் வரைந்தும் எம் அனைவரையும் பிரமிக்கச் செய்கின்றார்.

அது மட்டுமின்றி தன் சமூகம் மீது கொண்ட பற்றினால் தன்னால் இயன்ற சமூகப்பணிகளையும் நேரம் மற்றும் பிரதிபலனும் பாராது களத்திற்கு சென்று சேவை செய்கிறார்.

அத்துடன் மலையக திரைப்பட விழாவுக்கான அழகிய இலச்சினையை தன் கரங்களால் உருவாக்கியவரும் இவரே.!

தன் இலக்குக்கும் குறிக்கோளுக்கும் வரலாற்றில் ஒரு பக்கத்தினை பதிவு செய்ய போராடும் இந்த மலையக கலைஞனை மனம் திறந்து வாழ்த்துகின்றது மலையகம்.lk குழுமம்.

Related Articles

Back to top button