சினிமா

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கோமா நிலையில் சீரியல் நடிகர் வேணு அரவிந்த் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள வேணு, ’சபாஷ் சரியான போட்டி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

Back to top button