உலகம்

சிம்பாப்வேவின் பாதுகாப்பு அமைச்சக்கு தடை.

சிம்பாப்வேயின் பாதுகாப்பு அமைச்சர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மனித உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டமையுடன் தொடர்புபட்டுள்ளதால் சிம்பாப்வேயின் பாதுகாப்பு அமைச்சர் ஓவென் ங்கியூபே மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளை, பொறுப்புக்கூற வலியுறுத்துமாறு, சிம்பாப்வே அரசாங்கத்தை, குறித்த அறிக்கையினூடாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தடைகளுக்கு எதிராக சிம்பாப்வேயில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button