உலகம்

சிரியாவில் மீண்டும் தாக்குதல் – 13 பேர் பலி.

சிரியாவில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியா – துருக்கி எல்லையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகளில் துருக்கியால் கடந்த மாதம் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.

Related Articles

Back to top button