...
செய்திகள்

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவருமான கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்.

திடீர் சுகயீனமடைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் ஆஜரானவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதி வேண்டி, அயராது பாடுபட்டவர்.

சட்டத்துறையில் பல நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்திய சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen