செய்திகள்

சிறகுகள் அமையம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்..

மாணவர்களின் ஆளுமை விருத்தியினை அடிப்படையாகக் கொண்டு சிறகுகள் அமையம் ஊடாக
பாடசாலை மாணவர்களுக்கான கதை சொல்லுதல் மற்றும் கதை எழுதல் போட்டிகள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

கதை சொல்லல் போட்டியானது தரம் 1 தொடக்கம் தரம் 6 வரையான மாணவர்களுக்கு அவர்கள்
விரும்பும் ஒரு கதையினை கணொளியாக பதிவுசெய்து அனுப்ப முடியும். காணொளிகளை
0779764300 எனும் வாட்சப் அல்லது எனும் [email protected] மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பி வைக்கமுடியும்.

கதை எழுதுதல் போட்டி தரம் 7 – 9 வரையான மாணவர்களுக்கான போட்டியாக அமைகின்றது.
200-350 சொற்கள் கொண்ட கதையாக மாணவர்களின் கற்பனை ஆற்றலினை வெளிப்படுத்தும்
வகையில் அமைதல் வேண்டும். கதைகளை எனும் [email protected] மின்னஞ்சல்
அல்லது சிறகுகள் அமையம், 438/1 மத்திய வீதி பாரதிபுரம், கிளிநொச்சி எனும்
முகவரிக்கு தபாலில் அனுப்பமுடியும்.

அனைத்து போட்டிகளுக்குமான இறுதி திகதி 2021.07.10 ஆகும். மேலும்
பங்குகொள்பவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படுவதுடன் வெற்றியாளர்களுக்கான
பரிசில்களும் வழங்கப்படும்.

Related Articles

Back to top button