கல்விமலையகம்

சிறகுகள் அமையம் மற்றும் மலையக தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தால் புஸ்ஸல்லாவ மெல்போல்ட் தோட்டத்தில் நூலகம் திறந்து வைப்பு.

சிறகுகள் அமையம் மற்றும் மலையக தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தால் நூலகம் திறந்து வைப்பு.

மலையக தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் சிறகுகள் அமையத்தின் மற்றுமோர் வினைத்திறன் மிக்க முயற்ச்சியின் மூலம் புஸ்ஸல்லாவ மெல்போல்ட் தோட்டத்தில் நூலகமொன்று இன்று (2021.04.25) திறந்து வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றி தேவார பாராயணத்துடன் இனிதே ஆரம்பமான இந்நிகழ்வு மலையக தமிழ் பட்டதாரிகள் ஒன்றிய உறுப்பினர் செல்வி கௌசல்யாவினால் தொகுத்து வழங்கப்பட்டது.

மேலும் இந் நூலகத்தின் நோக்கம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக ஆசிரியை திருமதி. நாகேஸ்வரி, ஆசிரியர் சந்திரமோகன், ஆசிரியர் ஜெயகுமார்
ஆகியோர் உரையாற்றியதோடு
ஊடகவியளாலர் சனத் அவர்கள் நூலகத்தின் சிறப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்நிகழ்விற்க்கு வருகை தந்த ஒன்றிய தலைவர் மு.ராம்கி உரையாற்றியதோடு வெகுமதியான இரு கவிதைகளையும்ம் வாசித்தார்.

திருமதி. நாகேஸ்வரி (ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசர் கம்பளை கல்வி கல்வி வலயம்.), திரு.சந்திரமோகன் (இந்து தேசிய கல்லூரி புஸ்ஸல்லாவ.), திரு. ஜெயகுமார் (ஆசிரியர்.), சனத்
(ஊடகவியலாளர்.) மு.ராம்கி (மலையக தமிழ் பட்டதாரிகள் ஒன்றிய தலைவர்) ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்ததும் சிறப்பம்சமாகும்.

மெல்போட் தோட்ட மாணவர்களின் எதிர்காலம் கருதியும் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நூலகம் திறக்கப்பட்டதோடு தோட்டத்தின் வளர்ச்சிக்காக என்றும் உடனிருப்போம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button