செய்திகள்

சிறந்த தலைமுறையை கட்டியெழுப்ப பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம் – ஜனாதிபதி

ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். 

கதுறுவெல ஜயந்தி விகாரையில் நடைபெற்ற 124 ஆவது அகில இலங்கை அறநெறிப் பாடசாலைகள் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இதன்போது தஹம் சிசு சவிய புலமைப் பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது. 
அறநெறிப் பாடசாலைகள் நிதியத்தை பலப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இந்த நிகழ்வின் போது தெரிவித்தார். 

Related Articles

Back to top button