
நுவரெலியா – டயகம சந்திரிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளதுடன், விசேட பூஜைகளும் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய நெய்தியாளர் தெரிவித்தார்.
பல வருட காலமாக ஆலயத்தின் நிர்மாண பணிகள் மேற்கொண்டு வெற்றிகரமாக ஆலயம் புதிய பொழிவுடன் பத்த அடியார்களிடம் ஆலய பரிபாலன சபையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பல பகுதிகளை சேர்ந்த குருமார்கள் சிறப்பாக கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி முடித்தனர்.
மேலும், நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்செல்வன், டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தகர்கள், பல தோட்ட பகுதிகளை சேர்ந்த பத்த அடியார்கள் என பலரும் கலந்து கொண்டு இறை அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.