உலகம்செய்திகள்

சிறப்பு முகாமில் முதலமைச்சர் ஓவியத்துடன் இலங்கை தமிழர்கள் போராட்டம்.!

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர், தங்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் திகதி தொடங்கினர். அவர்களது போராட்டம் 15 நாட்களை கடந்தும் தொடர்கிறது. திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள் 5 பேர் உட்பட 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளனர்.

எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ரூ.175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் ரூ.18, 000 முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனா ராணியிடம் இவர்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் திகதி தொடங்கினர். தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேற்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button