செய்திகள்மலையகம்

சிறிய தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்கு உரம்

தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக இந்த வருடத்தில் தேவைப்படும் உர வகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையென்று தெரிவித்த அவர், சிறிய தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உரத்தொகைகளை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக தேயிலைப் பயிர்ச்செய்கைகளுக்கு அவசியமான சேதனப் பசளை உற்பத்தியையும் விநியோகத்தையும் 8 மாவட்டங்களில் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button