செய்திகள்

சிறிய வாகனங்களுக்கான வரி நீக்கம்.

கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொகுசு வரி, சிறிய ரக வாகனங்களுக்கு அமுல்படுத்தப்படாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வேன், சிங்கல் கெப், டபல் கெப், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு இந்த வரி அமுல்படுத்தப்படாது என அறிக்கை ஒன்றினூடாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரைக்காலம் சொகுசு வரி அறிவிப்பட்ட டபல் கெப்களுக்கு எதிர்வரும்முதலாம் திகதி தெடக்கம் சொகுசு வரி அறிவிடப்படமாட்டாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் வாகனங்களுக்கான சொகுசு வரி அமுல்படுத்தப்பட்டது.

35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான டீசல், பெற்றோல் கார்கள், ஜீப்களை இறக்குமதி செய்யும் போது இந்த சொகுசு வரி அறிவிடப்படும்.

சீ.ஐ.எவ் பெறுமதி கொண்ட 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 60 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுக்கு சொகுசு வரி அறவிப்படவுள்ளது.

இதேவேளை, சிலிண்டர் கொள்ளளவிற்கு அமைய அறிவிபடப்படும் வரியும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நீக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கடன் தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button