செய்திகள்மலையகம்

சிறுதெய்வ வழிபாட்டு இடத்தில் புத்தர் சிலையை வைத்த பிக்கு

இராகலையில் மாகுடுகல,க்ரென்டெவன் ஆகிய இரண்டு பிரதேசங்களுக்கு இடையில் ஒரு குடியேற்ற கிராமம் ஒன்றில் சுமார் 250 பெரும்பான்மையை சேர்ந்த குடும்பங்களும் 30 தமிழ் பேசுகின்ற மக்களும் வாழ் ந்த்துவருகின்றனர்.குறித்த கிராமத்தில் ஒரு பௌத்த விகாரை ஒன்று காணப்படுகின்றது.

குறித்த விகாரை 08 வருடத்திற்கு முன் பௌத்த பிக்கு ஒருவரால் நிர்வகிக்கப்பட்டது.அவருக்கு பின் விகாரையை நிர்வாகம் செய்ய வெலிமடையை பிறப்பிடமாக கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டநிலையில் . அவர் தன் சமயத்தை முதன்மை செய்வதாக எண்ணி அக்கிராமத்தில் காவல் தெய்வம் உள்ள இடங்களில் புத்தர் சிலைகளை வைத்தும் அங்குள்ள சிறு தெய்வ வழிபாட்டு இடங்களை ஓரம் செய்வதே இவரின் தொடர்ச்சியான கடமையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் மாகுடுகல கிராமத்தின் எல்லையில் தோட்ட மக்களின் காவல் தெய்வமான “நொண்டி சாமி” என்று அழைக்கப்படும் தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்ற பிக்கு ஊரில் யாருடைய அனுமதி இன்றி அந்த ஆலயத்தை சுத்தம் செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த நொண்டி சாமி சிலையை ஓரம் செய்து அங்கு புத்தர் சிலையை வைத்து வந்துள்ளார். இதனை கண்ட ஊர் மக்கள் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்தனர், குறிப்பாக இந்த எதிர்ப்பில் பெரும்பான்மை மக்களே அதிகமாக கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக பௌத்த பிக்கு குறித்த ஆலயத்தில் வைத்த புத்தர் சிலையை மீண்டும் நீக்கினார்.குறித்த பகுதியில் மத கலவரத்தை தூண்டும் விதமான இடப்பெறவிருந்த பிரச்சினை மலையக சமூக ஆய்வு மையத்தால் தீர்த்து வைக்கபட்டது.

Related Articles

Back to top button