செய்திகள்மலையகம்

சிறுத்தைகளை பாதுகாப்பதோடு மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – திலகர்

கரும்புலிகளை பாதுகாப்பது போன்று பெருந்தோட்டத் தொழில்துறைக்கு அச்சுத்தலாகவுள்ள சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று நடைபெற்ற தாவர வனவிலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வனவிலங்குகள் பற்றி பேசும்போது அதிகமாக யானைகள் பற்றிதான் பேசப்படுகின்றன. ஏனைய விலங்குகள் பற்றி பேசப்படுவதில்லை. சிங்கராஜா வனம் அல்லது அதனையொட்டிய பிரதேசங்களில் கரும்புலியொன்று உளாவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கரும்புலி இனம் அரிதானதாக உள்ளது. ஆப்பிரிக்க வனப்பகுதிகளில் காணப்படும் அந்த இனத்தை பாதுகாக்கப்பட வேண்டுமென சூழலியளார்களால் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அவற்றை பாதுகாக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.  ஆனால், சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் மலையகத்தில் அதிகமாக இருக்கின்றன. இதனால் பெருந்தோட்டப் தொழிலாளர்கள் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button