செய்திகள்

சிறுமியான தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும் யாழ்ப்பாணத்தில் இளைஞர் போரட்டம் ..

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் நபரொருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும் ஜனாதிபதி குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் மற்றும் சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button