செய்திகள்

சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்டத்தின் பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு..

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்டத்தின் பொது மயானத்திற்கு நேற்று (27) முதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சிறுமியின் பெற்றோர் மனித உரிமை திணைகளத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர்.

சம்மந்தப்பட்ட சிறுமியின் விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது.

இதன்போது நீதிபதி சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
image download