செய்திகள்

சிறைக்கைதிகளின் தண்டணைகள் குறைப்பு.

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ்,
சுமார் 450 கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, தண்டனைகளை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின்
பெயர்ப்பட்டியல் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்தே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், உடனடியாக கைதிகளுக்கான தண்டனைகள்
குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அந்த தண்டனை 20 வருடங்கள்
வரை குறைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button