உலகம்

சிலியில் பாரிய ஆர்ப்பாட்டம்.

சிலியில் சுரங்கப்பாதை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கப்பாதை போக்குவரத்துக்கான கட்டணங்களை சிலி அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனால் 2.4 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, மாணவர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சுரங்கப்பாதை போக்குவரத்து நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு தீ வைத்ததையடுத்து சிலியில் வன்முறை அதிகரித்துள்ளது.

இதுவரை 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலியில் 1990 ஆண்டில் ஜெனரல் அகஸ்டோ பினோசேவின் இராணுவ சர்வாதிகாரம் முடிவடைந்த பின்னர் முதன்முறையாக தலைநகரில் படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சிலியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button