...
செய்திகள்

சிவனொளிபாதமலை பக்தர்களுக்காக சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

கொரோனா தொற்றுப் பரவலால் புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாத மலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பக்தர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை அல்லது அட்டை நகல் வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு யாத்திரையானது டிசம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்தாண்டு மே 16 ஆம் திகதி நிறைவடைவுள்ளது.
மாவட்டச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய யாத்ரிகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லிஹினிஹெல பலபத்தல ஆலயம், ஹரமிட்டிபான, அதியமலதென்ன, வர்ணகல, சீதககுல, மெதஹின்ன, இண்டிகடுபன ஓய்வு இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை தங்குமிடமாகப் பயன்படுத்தலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி கடைகள் கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக விலகல் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen