செய்திகள்மலையகம்

சிவனொளிபாதமலை யாத்திரை- இதுவரை போதைப்பொருட்களுடன் சுமார் 150 இளைஞர்கள் கைது ..?

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பித்து ஓர் மாதத்திற்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற சுமார் 150 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின்,ஐஸ்,கேரளா கஞ்சா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 110 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 40 பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download