...
செய்திகள்நுவரெலியாமலையகம்

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் யாத்திரிகர் தீ வைத்து தற்கொலை முயற்சி

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.

நல்லத்தண்ணி பகுதியில் இன்று (03) அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிக்கோயா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நல்லத்தண்ணி தனியார் வாகன தரிப்பிடத்தில் வைத்து, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (02) 36 யாத்திரிகர்களுடன் பஸ் ஒன்றில் வருகைத்தந்த குழுவிலுள்ள ஒருவரே இவ்வாறு தீ வைத்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen