...
செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிதாக மூன்று அரசியல் கட்சிகள் பதிவு..

புதிதாக மூன்று அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி  (நவ லங்கா நிதாஸ் பக்சய) மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய மூன்று கட்சிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியும், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதன்படி நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen