உலகம்செய்திகள்

சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்திலுள்ள இலங்கை மாணவர்கள் 150 பேரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை..

சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்திலுள்ள ச்செண்டு நகரிலுள்ள இலங்கை மாணவர்கள் 150 பேரை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையூடாக அறிவித்துள்ளது.

நெய்ஜிங்கியில் வசிக்கும் மேலும் 30 பேர் தொடர்பில் தகவல்கள் தூரகத்திற்கு கிடைத்துள்ளன.

அவர்களையும் நாட்டிற்கு உடனடியாக அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download