செய்திகள்

சீனாவின் புதிய குழந்தைக் கொள்கை

(ராகவ்)

சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவையடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் சீனா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதற்கமைய இரண்டு குழந்தைக் கொள்கை வலுவிழக்கச் செய்யப்பட்டு சீன தம்பதிகள் இனிவரும் காலங்களில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது உலகெங்கிலும் உள்ள கடுமையான குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

எனினும், வயதான தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்த அச்சம் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைக் கொள்கையை சீனா அறிவித்தது.

தற்போதைய நிலையில் சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் ,2050 ஆம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் முதியவர்களைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் பின்னர் சீனாவில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button