உலகம்செய்திகள்

சீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு சுகாதார அமைச்சினால் விசேட ஆலோசணை..

சீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு சுகாதார அமைச்சினால் விசேட ஆலோசணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது சீனாவில் பரவும் கொரோனா வைரஸை கருத்திற் கொண்டு இந்த ஆலோசரணைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி சீனாவில் சுற்றுளா மேற்கொள்வோர் அங்குள்ள பொது இடங்களுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் வுஹான் நகரில் பரவியுள்ள கொரோனா வைரஸினால் ,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேரின் நிலை கவலை கிடமாக உள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்திட்குற்பட்டவர்களில்,ஐம்பது பேர் வரை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தமக்கு அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெசிங்க கூறியுள்ளார்.

எனவே சீனாவுக்கு சுற்றுளா செல்லுவோர் அங்குள்ள பொது இடங்களுக்கு செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செல்லும் பட்சத்தில் மூக்கு மற்றும் முகத்தை மூடிக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெசிங்க பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் இந்த பின்புலத்தில் சீனாவுக்காக பயணத்தடையை விதிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button