...
செய்திகள்

சீனாவிலிருந்து மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தது.

சீனாவிலிருந்து மேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இன்று (18) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடம் கொள்வனவுக்காக கோரிய கடைசி 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளே இவ்வாறு இன்று இலங்கையை வந்தடைந்ததாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பணி சம்பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

அதற்கமைய இலவசமாக 3 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் உள்ளிட்ட சீனாவிடமிருந்து இதுவரை 26 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ள தடுப்பூசி தொகையானது, இலங்கையின் தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் 80% ஆனவை என, தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சனத்தொகையில் அரைவாசிப் பேருக்கு (50%), கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

நேற்றையதினம் (17) இம்மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Sinopharm – 8,973,670
  • Astra Zeneca – 949,105
  • Moderna – 758,282
  • Pfizer – 243,685
  • Sputnik – 43,453

அந்த வகையில் மொத்தமாக 10,968,195 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen