உலகம்

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் புதிய கொவிட் கொத்தணி.

சீனாவில் ஆரம்ப பாடசாலை ஒன்றுடன் தொடர்புபட்டு புதிய கொரோனா வைரஸ் கொத்தணி ஒன்று உருவாகி உள்ளது. புஜியான் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மாணவன் ஒருவனின் தந்தையுடன் தொடர்புபட்டே இந்த புதிய கொத்தணி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களுக்குள் 100க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஒரு வாரத்திற்குள் கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று புஜியான் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் வுஹான் நகருக்குப் பின் மிகப்பெரிய நோய்த் தொற்று ஏற்பட்ட நன்ஜியாங் பிராந்திய நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னரே அங்கு புதிய கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது. புஜியான் மாகாணத்தில் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் புட்டியான் நகரே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download